சிறு, குறு விசாயிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் தினமும் மாலையில் மது குடித்து விட்டு செல்லும் பழக்கம் உள்ளவர்கள். கடை திறக்கப்படாமல் உள்ளதால் வெளியூர்களுக்கு சென்று குடித்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. வெளியூர் செல்வதால் போக்குவரத்து செலவு கூடுதலாகிறது. எனவே உள்ளூரில் கட்டப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகயை திறக்க வேண்டும்.
உள்ளூரில் டாஸ்மாக் கடை இல்லை என்பதால் வெளியூர் சென்று தினமும் குடிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், அதனால் அரசு பேருந்துகளில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குடிமகன் ஒருவர் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளுக்கு நாள் தமிழக குடிமகன்களின் அக்கபோர்களும், அலப்பறைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு வரக்கூடிய மது பிரியர்கள் மது அருந்திவிட்டு உச்சகட்ட போதையில் சாலைகளில் விழுந்து கிடப்பது வாடிக்கையான ஒன்றாகும். சில போதை ஆசாமிகள் மது போதையின் உச்சத்திற்கு சென்று பேருந்து நிலையத்தில் இருந்து வரக்கூடிய பேருந்துகளை வழிமறித்து ரகளையில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு வசந்தாபுரத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன்(40). விவசாயி. இவர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி வேலைப்பாளையம் அருகில் டாஸ்மாக் கடை கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
சிறு, குறு விசாயிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் தினமும் மாலையில் மது குடித்து விட்டு செல்லும் பழக்கம் உள்ளவர்கள். கடை திறக்கப்படாமல் உள்ளதால் வெளியூர்களுக்கு சென்று குடித்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது. வெளியூர் செல்வதால் போக்குவரத்து செலவு கூடுதலாகிறது. எனவே உள்ளூரில் கட்டப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகயை திறக்க வேண்டும்.
அல்லது குடிமகன்கள் வெளியூர் சென்று குடித்துவர வசதியாக தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் செங்கோட்டையன் கொடுத்த மனுவை படித்து பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். மனுவை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி செங்கோட்டையனை அங்கிருந்து அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.