பள்ளி மாணவிகள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் – தற்கொலை தான் ஒரே முடிவா?

By manimegalai aFirst Published Nov 22, 2021, 3:00 PM IST
Highlights

கோவை, கரூர் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளான். பெற்றோர்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமையாசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிகள் மீது தொடர்ச்சியாக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்  தொடர்பான செய்திகள் நம்மை சுற்றி வலம் வருவது நாளுக்கு நாள் அதிரித்துள்ளது. மாணவிகளின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல், பள்ளி நிர்வாகத்தின் மீது கலங்கம் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் தான் தலமையாசிரியர் முதல் பள்ளி முதல்வர் வரை செயல்படுவது நம்மால் பார்க்க முடிகிறது. தனக்கு நேரிடும் பாலியல் தொல்லைகளை பெற்றோரிடமும் அல்லது ஆசிரியரிடமோ சொல்ல முடியாமல், மாணவிகள் தற்கொலையை தேடுவது வேதனைக்குரியது .இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, அடிப்படை பிரச்சனைகளை ஆராய்ந்து, உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . அதனை தொடர்ந்து கரூரில் பள்ளி மாணவியின் தற்கொலை பெண்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களிடம்  அச்ச உணர்வை ஏற்படுத்துயுள்ளது . இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் திருமலைமூர்த்தி மீது தற்போது புகார் எழுந்துள்ளது. அப்பள்ளி பயிலும் முன்னாள் மாணவிகள் சிலர் அந்த ஆசிரியர் மீது தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதாக புகார் ஒன்றை ஆன்லைன் மூலமாக அளித்துள்ளனர். இதனையடுத்து, ஈரோடு மாவட்ட எஸ்.பி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் புகாருக்குள்ளான அரசு பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், உயிரியல் ஆசிரியர் திருமலைமூர்த்தி, மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுப்பட்ட ஆசிரியர் திருமலைமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று பெற்றோர்கள் கொடுத்த புகாருக்கும், மாணவிகள் கொடுத்த புகாருக்கும் தலைமை ஆசிரியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவிகளின் பெற்றோர்கள் சாலைமறியல் ஈடுப்பட்டனர்.  மேலும் பள்ளி தலைமை ஆசிரியரை கைதுசெய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

click me!