தி.க. தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை!!

By Narendran SFirst Published Jan 18, 2022, 5:59 PM IST
Highlights

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் மூன்றாம் அலை வேகமெடுத்து வருகிறது. அதேபோல நாட்டிலேயே கொரோனா மூன்றாம் அலையில் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,40,268 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு 23,443 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,443 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6,124 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,009 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 10 பேரும் தனியார் மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,52,348 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,42,476ல் இருந்து 1,52,348 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13,551 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,74,009 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொரோனாவின் பிடியில் பொதுமக்கள் மட்டுமின்றி பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முக்கிய அரசு அதிகாரிகள், சினிமா நடிகர், நடிகைகள் போன்ற பிரபலங்கள் என பலரும் அண்மை காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

click me!