வாக்கு சேகரிப்புக்கு மத்தியில், திமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எஸ்.எஸ் சிவசங்கருடன் அரியலூரில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூரில் விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே கள்ளக்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரும் அவருடன் வழிபாடு செய்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு சுயேச்சை சின்னமாக பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன் ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், திருமாவளவன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையில் திருமாவளவன் அரியலூர் மாவட்டத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார். வாக்கு சேகரிப்புக்கு மத்தியில், திமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எஸ்.எஸ் சிவசங்கருடன் அரியலூரில் உள்ள வரதராஜர் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
திமுகவின் காலை உணவுத் திட்டம் உலகத்துக்கே முன்னோடி! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வாக்கு சேகரிப்பின் நடுவே தேநீர் இடைவேளையில் நானும் மாண்புமிகு அமைச்சர் அவர்களும்!
மக்களின் ஆதரவு பெரும் உத்வேகம் அளிக்கிறது! பிரச்சாரப்பணியை இன்னும் வேகப்படுத்துவோம்; நம் வெற்றியை உறுதிப்படுத்துவோம்! pic.twitter.com/3040RCLCxJ
பின்னர், பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த செய்த தொல். திருமாவளவன், பரப்புரையை முடித்துவிட்டுச் செல்லும்போது கலியபெருமாள் வரதராஜர் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது அமைச்சர் சிவசங்கரும் உடன் இருந்தார்.
இதனிடையே, ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமா, வாக்கு சேகரிப்பின் நடுவே தேநீர் இடைவேளையில் அமைச்சர் சிவசங்கருடன் ஒரு கடையில் டீ குடித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். "மக்களின் ஆதரவு பெரும் உத்வேகம் அளிக்கிறது! பிரச்சாரப்பணியை இன்னும் வேகப்படுத்துவோம்; நம் வெற்றியை உறுதிப்படுத்துவோம்!" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், "பிரச்சாரத்தில் பல நெகிழ்ச்சியான தருணங்களைக் காண்கிறேன்! இத்தகு தருணங்களும், உங்களின் ஆதரவும்தான் என்னை ஒவ்வொரு நாளும் ஊக்குவிக்கிறது!" என்றும் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணிக்கு ஆதரவு... ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும்: மன்சூர் அலிகான்