Tamil Nadu : சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, இன்று அமைச்சர் கே.என் நேரு அவர்கள் பதில் உரை அளித்து, பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என் நேரு வெளியிட்ட அறிக்கைகளின்படி, தமிழகத்தில் விரைவில் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார். அதேபோல தமிழகத்தில் உள்ள நகராட்சிகளின் எண்ணிக்கையை 159 ஆகவும், பேரூராட்சிகளின் எண்ணிக்கையை 700 ஆகவும் உயர்த்த ஆவணம் செய்யப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.
சென்னையை பொறுத்த வரை பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் மற்றும் மதுக்கரை உள்ளிட்ட நான்கு நகராட்சிகள், அதன் அருகில் உள்ள மாநகராட்சியோடு இணைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 7 பேரூராட்சிகளை, நகராட்சியாக தரம் உயர்த்தவும் உத்தேசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Kallakurichi: கள்ளக்குறிச்சி விஷசாராய மரணத்திற்கு பின்னால் அண்ணாமலையின் சதி? ஆர்.எஸ்.பாரதி சந்தேகம்
வாழப்பாடி, தம்மம்பட்டி உள்ளிட்ட 13 பேராட்சிகள், 11 நகராட்சிகளாக தரம் உயர்த்தவும். எட்டு ஊராட்சிகளை இணைத்து புதியதொரு நகராட்சியை உருவாக்கவும் ஆவணம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை ஜூன் மாதம் 24 ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுஒருபுரம் இருக்க தலைவாசல், காட்டுக்கோட்டை, சிறுவாச்சூர் போன்ற ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே என் நேரு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Kallakurichi: கள்ளக்குறிச்சி விஷசாராய மரணத்திற்கு பின்னால் அண்ணாமலையின் சதி? ஆர்.எஸ்.பாரதி சந்தேகம்