"வீட்டிலேயே முடங்கி கிடக்கும் வர்ஷா" –சினிமா ஆசையில் மதனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தகவல்

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 03:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
"வீட்டிலேயே முடங்கி கிடக்கும் வர்ஷா" –சினிமா ஆசையில் மதனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தகவல்

சுருக்கம்

கடந்த 2 வாரமாக மதன் திருப்பூரில் உள்ள வர்ஷா (35) வீட்டில், பதுங்கி இருந்து இருந்தார். ஆனால் அவரிடம் விசாரித்தபோது, மதன் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறி உள்ளார். அந்த வீட்டில் சோதனை போட்ட போதும், மதன் அங்கு இல்லை. ஆனால், மதன் அந்த வீட்டில் தான் ரகசிய அறையில் பதுங்கி இருந்துள்ளார்.

திருப்பூரில் நவநாகரிகத்தை விரும்பும் பெண்களுக்கு எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகே உள்ள ‘வீஸ்போட்டிக்’ என்ற நாகரிக ரெடிமேட் கடையை தெரியாமல் இருக்காது. அதுதான் வர்ஷா நடத்தி வரும் கடை. இந்த கடையில் நான்கைந்து பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.

செல்வ செழிப்பான தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த வர்ஷா, பள்ளிப் படிப்பை தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் பேஷன் டிசைனிங் பட்டப்படிப்பை முடித்தார். அவருக்கு திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனர்.

பேஷன் டிசைனிங் தொழிலில் இறங்கிய வர்ஷா, நடிகைகளுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்தார். திரை உலக தொடர்பு ஏற்பட்டதும் வீட்டுக்குள் பிரச்சனை எழுந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நிரந்தர பிரிவுக்கு வழி வகுத்தது. 6 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த வர்ஷா தனது குழந்தைகளுடன் தனிக்குடித்தனத்தை தொடங்கினார்.

அவினாசியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்தபோது துணை நடிகைகள் போல் அழகிய பெண்கள் பலர் வந்து போனார்கள். இதனால் குடியிருப்புவாசிகள், அவரை அங்கிருந்து துரத்தினார்கள்.

அங்கிருந்து வெளியேறிய வர்ஷா, தற்போது குடியிருக்கும் பூண்டி அருகில் உள்ள ஜி.வி.கார்டன் பங்களா வீட்டுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் குடிவந்தார். கீழ்தளத்தில் 2 படுக்கையறை, மிகப்பெரிய ஹால், சாப்பாட்டு அறை, மேல்தளத்தில் 2 அறை, சுற்றிலும் தோட்டத்துடன் பிரமாண்டமாக இருக்கும் இந்த வீட்டுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை கொடுத்து வருகிறார்.

சினிமா துறையினருடன் தொடர்பு ஏற்பட்ட போதுதான், வர்ஷாவுக்கும் மதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வர்ஷாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருந்துள்ளது. இதனால் பட தயாரிப்பாளரான மதனிடம் நெருங்கி பழகினார். மதனும் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்தால்தான் பிரச்சனை வருகிறது என்பதால், வர்ஷா இந்த தனிவீட்டை தேர்வு செய்துள்ளார். இந்த பகுதியில் சுமார் 15 பங்களா வீடுகள் உள்ளன. ஆள் அரவமற்ற இந்த பகுதி வர்ஷாவின் தனி வாழ்க்கைக்கு வசதியாக இருந்துள்ளது.

தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வர்ஷாவை சந்திக்க அடிக்கடி மதன் சென்றுள்ளார். தான் பிரச்சனையில் சிக்கி இருப்பதையும், போலீஸ் மோப்பம் பிடித்து வடமாநிலங்களிலும் தேடி வந்ததையும் தெரிவித்து வர்ஷா வீட்டில் தலைமறைவு வாழ்க்கையை தொடங்கினார்.

பகல் நேரங்களில் மதன் வெளியே வருவதில்லை. அவர் வெளியே சுற்றுவதற்காக விலை உயர்ந்த பைக் வாங்கி இருக்கிறார்கள். இரவு 7 மணிக்கு மேல் அந்தபைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி வெளியே சுற்றி வந்துள்ளார்.

வர்ஷா வீட்டில் விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள் உள்ளன. மதன் அங்கு தலைமறைவாக இருந்தபோது அந்த காரில் அடிக்கடி கோவைக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரை வர்ஷாதான் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

மதனை வீட்டுக்குள் மடக்கியதும் வர்ஷா நடுங்கி போனார். கடந்த 3 நாட்களாக கடையும் திறக்கவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
TVK Vijay: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! வீட்டுக்கு போய் தரமான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்