சென்னையை புரட்டிப்போட்ட வர்தா புயல் சேதம் ….ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு…

First Published Dec 19, 2016, 6:35 AM IST
Highlights


சென்னையை புரட்டிப்போட்ட வர்தா புயல் சேதம் ….ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு…

அதிதீவிர வர்தா புயல் கடந்த 12 ம் தேதி சென்னையை சின்னாபின்னமாக்கிச சென்றது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களையும் பாடாய்படுத்திவிட்டுச் சென்றது.

இந்த புயலில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

மின் மாற்றிகளும், செல்போன் டவர்களும் பழுதடைந்ததால் மின்வினியோகம் தடைபட்டது.

தொலைத் தொடர்பு, சாலைப்போக்குவரத்து,ரயில் போக்குவரத்து போன்றவை பாதிக்கப்பட்டன. 18 பேர் உயிரிழந்தனர்.

13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வர்தா புயலால் மின் வாரியத்துக்கு மட்டும் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு , ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் வர்தா புயல் சேதத்தைப் பார்வையிட்டு மதிப்பிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரவீண் வசிஷ்டா தலைமையிலான அதிகாரிகள் குழு அடுத்த வாரம்  தமிழகம் வருகிறது.

 இந்தக் குழுவில் மத்திய நிதி, வேளாண்மை, ஊரக வளர்ச்சி, தொழில், மனிதவள மேம்பாடு ஆகிய அமைச்சகங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் இடம்பெறுவார்கள்.

 இந்தக் குழுவினர் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

 

 

.
 

click me!