
ஏடிஎம் ல் பணம் எடுத்துக் கொடுக்க சம்பளத்திற்கு ஆள் தேவை….நுதன விளம்பரத்தால் பரபரப்பு…..
உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் சாதாரண பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000 ரூபாய்க்காக ஏடிஎம் ஐத் தேடி, அதில் பணம் இருக்கிறதா என கண்டுபிடித்து மணிக்கணக்கில் காத்திருந்து பணம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலைதான் நிலவுகிறது. அன்றாடத் தேவைகளுக்காக வெறும் 2000 ரூபாய் எடுப்பதற்காக முழுநாள் வேலையையும் விட்டுவிட்டு மக்கள்படும் அவஸ்தை தாங்கமுடியாமல் உள்ளது.
கிட்டத்தட்ட 40 நாட்களாகியும் இன்னும் பெரும்பாலான ஏடிஎம் கள் மூடியே கிடக்கின்றன. பணத் தேவையையும் சமாளித்து, அன்றாட பிழைப்பையும் பார்ப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.
இத்தகைய சூழ்நிலையில்தான் திருச்சியைச் சேர்ந்த ஒரு கவரிங் நகைக் கடை உரிமையாளர் தனது கடை முன்பு ’’ ஏடிஎம்.ல் பணம் எடுத்துக் கொடுக்க சம்பளத்திற்கு ஆள் தேவை” என போர்டு வைத்துள்ளார். தனக்கிருக்கும் வேலைப்பளுவில் சம்பளம் கொடுத்து பணம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இன்னும் எத்தனை பேர் சம்பளத்திற்கு ஆள் வைத்து ஏடிஎம் ல் பணம் எடுக்கப்ப போகிறார்களோ?