
திருச்சி அருகே உறையூரில், குப்பை தொட்டியில் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மக்கள், இன்று காலை தங்களது வீட்டில் இருந்த உணவு மற்றும் கழிவு பொருட்களை, வெளியே உள்ள குப்பை தொட்டியில் கொட்வதற்காக சென்றனர்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில், 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வீசப்பட்டு இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு இருந்த கரன்சி நோட்டுகளின் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் காட்டுத் தீப்போல் வேகமாக பரவியது.
இதன் காரணமாக, குப்பை தொட்டியை காண ஏராளமான மக்கள் வந்த வந்தனர். இதற்கிடையில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதிக்கு சென்று, குப்பை தொட்டியில் இருந்த பணத்தை, வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் கைப்பற்றினர். மேலும், இந்த பணத்தை வீசியது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.