ஜெயலலிதாவை பூஜை அறையில் வைத்து வணங்கும் உண்மை விசுவாசிகள்... அதுதான் ஜெ..!!!

Asianet News Tamil  
Published : Dec 18, 2016, 11:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ஜெயலலிதாவை பூஜை அறையில் வைத்து வணங்கும் உண்மை விசுவாசிகள்... அதுதான் ஜெ..!!!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதை தொடர்ந்து அவருக்கு அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது ஆன்மா சாந்தியடைய பல்வேறு பூஜைகள் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், ருபேந்திரகுமார் என்ற தொண்டர், மறைந்த முன்னாள் முதலைமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் தீவிர தொண்டர் ஒருவர் தனது வீட்டின் பூஜை அறையில், ஜெயலலிதாவின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார். இதுகுறித்து அவர், தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

அதில், அமரர் ஜெயலலிதாவுக்காக எளிய பிரார்த்தனை செய்து விட்டேன். ஒரு மோட்ச தீபம் ஏற்றி, புளியோதரை, முந்திரி அல்வா செய்து ஸ்ரீராமருக்கு நிவேதானம் படைத்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்தேன்.

அன்னாரின் அன்மா சாந்தியடையவும், அவர் மேலும் பல சிறந்த பிறவிகளும் இறுதியில் வைகுண்ட பதவியும் கிடைக்கப் பெறவும், அவரது மரணத்தில் ஏதேனும் மர்மம் இருந்தால் அது வெளிவரவும் வேண்டி கொண்டேன்!

ஓம் ஷாந்தி…!

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி