வர்தா புயல்...!!! மத்திய குழு இன்று தமிழகம் வருகை

First Published Dec 23, 2016, 12:10 PM IST
Highlights


தமிழகத்தில் வர்தா புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடவும், மதிப்பிடவும் மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. 

சமீபத்தில் வங்ககடலில் உருவான வர்தா புயல்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை புரட்டி போட்டது பலத்த சேதத்தை ஏற்படுத்திய புயல் பாதிப்பில் நிவாரண  பணிகளை மேற்கொள்ள ரூ.22,573 கோடி நிவாரண நிதி தேவை என பிரதமர் மோடியிடம், முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் கோரிக்கை விடுத்தார்.

 மேலும் புயல் பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

இந்நிலையில் வர்தா புயலின் சேதங்களை பார்வையிடவும் மற்றும் மதிப்பிடவும், மத்திய உள்துறை இணை செயலாளர் பிரவின் வசிஷ்டா தலைமையிலான 8 பேர் கொண்ட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கை அனுப்பும்.

click me!