தொகுதியில் ஏதாவது பிரச்னையா..? வாட்ஸ் அப் தான்… நம்பரை ரிலீஸ் செய்த வானதி சீனிவாசன்

Published : Oct 08, 2021, 08:11 PM IST
தொகுதியில் ஏதாவது பிரச்னையா..? வாட்ஸ் அப் தான்… நம்பரை ரிலீஸ் செய்த வானதி சீனிவாசன்

சுருக்கம்

தொகுதியில் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் வாட்ஸ் அப் நம்பரை வெளியிட்டு உள்ளார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

கோவை: தொகுதியில் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் வாட்ஸ் அப் நம்பரை வெளியிட்டு உள்ளார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து படிப்படியாக முன்னேறி 2013ம் ஆண்டு பாஜக மாநில செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பின்னர் மாநில பொது செயலாளர் என்று பொறுப்பு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு முதல் மகளிரணி தேசிய தலைவராக பதவி வகித்து வருகிறார்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வென்று எம்எல்ஏவானார். அடுத்து வரக்கூடிய தேர்தலுக்குள் பாஜகவை செல்வாக்கை கோவை மாவட்டத்தில் மேலும் உயர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.

இந் நிலையில், தொகுதி மக்களின் கோரிக்கைகள், குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்து கொடுக்க அதிரடி நடவடிக்கை ஒன்றில் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் வெளியிட்டு உள்ளார். அந்த நம்பர் 72003 31442.

இந்த எண்ணை மக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!