சபரிமலை சென்ற வேன் விபத்து : 15 பேர் காயம்

 
Published : Nov 19, 2016, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
சபரிமலை சென்ற வேன் விபத்து : 15 பேர் காயம்

சுருக்கம்

சென்னையிலிருந்து சபரிமலை நோக்கி சென்ற பக்தர்கள் வேன் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் விபதுக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து சபரிமலை நோக்கி சென்ற பக்தர்கள் வேன்,உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றபொழுது, நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் வேனிலிருந்தவர்களை மீட்டு  அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் வேனிலிருந்த பக்தர்கள் 15 பேர் படுகாயமடைந்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி