
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது போல, நவம்பர் 13 முதல் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும், தென் தமிழக கடலோர பகுதிகளிலும், பரவலாக மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், திருவாரூர் மாவட்டத்தில், அதிக பட்சமாக, 4 செ.மீ., மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது இன்னும் இரு நாட்களில் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்பதால், தென் மாவட்டங்களில் வரும், 22 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.