VAIKO : தோள்பட்டை எலும்பு முறிந்த கட்டோடு நாடாளுமன்றம் வந்த வைகோ.! மீனவர்களை மீட்க ஆவேச உரை

By Ajmal Khan  |  First Published Aug 6, 2024, 4:34 PM IST

இலங்கைக் கடற்படையினர் நமது கடல் ஆதிக்கம் உள்ள இடத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நமது மீனவர்களைப் பார்த்து, படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தலையை தனியாக வெட்டியும் கோர கொலையை செய்திருப்பதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 


வைகோ கையில் எலும்பு பாதிப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய அளவில் அப்ரேஷன் செய்யப்பட்டது. ஒரு சில வாரங்களுக்கு பிறகு உடல் நலன் தேறியவர் மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றார். இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கையில் கட்டோடு கலந்து கொண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பேசினார்.

Tap to resize

Latest Videos

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்குப்படுவது தொடர்பாக பிரச்சனை எழுப்பினார். தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்தையும், வலைகளை அறுப்பதையும், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்வதையும் தங்கள் பொழுதுபோக்காக இலங்கைக் கடற்படை செய்து வருகிறது.

எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ஸ்டாலின் வெட்கித் தலை குனியனும்- இறங்கி அடிக்கும் இபிஎஸ்

இந்தியா வெற்றி - மீனவர்கள் மீது தாக்குதல்

கடந்த 45 வருடங்களில் 875 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2014 ஆம் வருடம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. அந்தப் போட்டி நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்திய மீனவர்களைப் பார்த்து, கிரிக்கெட்டில் இம்முறை நாங்கள் தோற்றால் உங்களை எல்லாம் கடலிலேயே வெட்டி தலை வேறு, முண்டம் வேறு என்று ஆக்கிவிடுவோம் என மிரட்டினர். அம்முறை இலங்கை தோற்று, இந்தியா வெற்றி பெற்றுவிட்டது. அன்றைய நாளிலேயே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களை  கொடூரமாக இலங்கைக் கடற்படை கொலை செய்தது. தலை வேறு, முண்டம் வேறாக நான்கு தமிழர்களின் உடல்களும் கடலில் மிதந்தன.

மீனவர்கள் காணவில்லை

இப்பொழுது, பத்து நாட்களுக்கு முன்பே இலங்கைக் கடற்படையினர் நமது கடல் ஆதிக்கம் உள்ள இடத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நமது மீனவர்களைப் பார்த்து, படகின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், தலையை தனியாக வெட்டியும் கோர கொலையைச் செய்தார்கள். தற்போது 85 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டனர். ஒரு மீனவரைக் கொன்றுவிட்டனர். ஒருவர் காணாமலேயே போய்விட்டார். உடலும் கிடைக்கவில்லை. தமிழக மீனவர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தினார். 

ரத்து செய்யப்பட்ட ஸ்டார் ஹோட்டல்களுக்கு 48 மணி நேரத்தில் மீண்டும் பார் உரிமம்! மர்மம் என்ன? சொல்லுங்க!அன்புமணி

click me!