
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் ஆகஸ்ட் மாதம் தமிழக உரிமை மீட்கும் சுற்றுப்பயணம் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ள நிலையில் கட்சி ஏற்பாடு குறித்தும் வரவேற்பு அளிப்பது குறித்து வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன்: விசிக தலைவர் தொல் திருமாவளவன் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கக் கூடாதா என்று திமுக விடம் தான் கேட்க வேண்டும். திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளனை நியமிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்க தயாரா என்பது தான் என கேள்வி.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண் கொலை எடுத்துக்காட்டு. பெண்களுக்கு எதிரான கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் கண்டு ஒரு பக்கம் திமுக நடுங்குகிறது. ஒரு பக்கம் டெல்லி அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. பொது எதிரியான திமுகவை வீழ்த்த சீமானும், தவெகவும் ஒன்றிணை வேண்டும் என்பதுதான் புத்திசாலித்தனம் மற்றும் ராஜதந்திரம் என தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி பின் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு தல வாழலையில் லெக் பீஸ் பிரியாணியும், சிக்கன் கிரேவியும் வழங்கி அசத்தலான விருந்தில் முன்னாள் அமைச்சர்கள் வைகைச் செல்வன் மற்றும் சோமசுந்தரம் நிர்வாகிகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.