உத்தரப்பிரதேச மின் நிலையத்துக்கு "நெய்வேலி உத்தர்பிரதேஷ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது - என்.எல்.சி

Asianet News Tamil  
Published : Sep 21, 2017, 08:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
உத்தரப்பிரதேச மின் நிலையத்துக்கு "நெய்வேலி உத்தர்பிரதேஷ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது - என்.எல்.சி

சுருக்கம்

Uttar Pradesh Electricity Station has been named Neyveli Uthirpradeesh - NLC

கடலூர்

உத்தரப்பிரதேச மின் நிலையத்துக்கு "நெய்வேலி உத்தர்பிரதேஷ்' மின் நிறுவனம் என்றேபெயர் வைக்கப்பட்டுள்ளது. என்று என சீர்காழி மின்திட்டம் குறித்து என்.எல்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்.எல்.சி இந்தியா நிறுவனம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், “நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் அமைக்கவிருந்த 4000 மெகா வாட் மின் திட்டம் ஒடிஸா மாநிலத்திற்கு மாற்றம் என்ற கருத்தில் சமீப காலமாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு 2013-ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம், ஜில்கா பர்பாலி என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்தது. அங்கு கிடைக்கும் நிலக்கரியைப் பயன்படுத்தி நாகை மாவட்டம், சீர்காழி அருகே 4000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க என்எல்சி திட்டமிட்டது.

ஆனால், அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான அளவு நிலக்கரி வெட்டி எடுக்க சாத்தியக் கூறுகள் இல்லை. வேறு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யக் கோரப்பட்டதில், ஒடிஸா மாநிலம், தலபிரா பகுதியில் இரு நிலக்கரிச் சுரங்கங்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

அன்றைய காலத்தில் நாட்டின் மின் துறையில் நிலவிய சூழ்நிலை, விற்பனை விலை, மின் பற்றாக்குறை ஆகிய காரணிகளைக் கணக்கிட்டதில் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக இயக்க வாய்ப்புகள் இருந்தன.

தற்போது ஒரு யூனிட் ரூ.2.50 விலைக்கு சூரியஒளி மின்சக்தி கிடைக்கும் நிலையில், சீர்காழி மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சக்திக்கு உற்பத்தி செலவு மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிய வந்ததால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை என முடிவு செய்யப்பட்டது.

மேலும், நெய்வேலியில் இருப்பது போல சுரங்கத்துக்கு அருகில் அனல்மின் நிலையத்தை அமைப்பதால் செலவுகள் தவிர்க்கப்படும். அதேபோல, ஒடிஸா சுரங்கத்தின் அருகில் அனல்மின் நிலையம் அமைப்பதுதான் லாபகரமாக இருக்கும்.

சீர்காழி மின் நிலையத்தை மாற்றியதற்கு ஈடுசெய்யும் வகையில், தமிழகத்தில் 5300 மெ.வா. திறன்கொண்ட மின் நிலையங்களை அமைக்க என்எல்சி பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக நெய்வேலி, பாளையங்கோட்டை, வெள்ளாற்றின் தென் பகுதியில் சுரங்கம் அமைக்க உள்ளது. இந்தத் திட்டத்தால் இருமடங்கு தொகை தமிழகத்தில் முதலீடு செய்யப்படும். வேலை வாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவனம் நாடு முழுவதும் தனது திட்டங்களை அமைத்து வரும் நிலையிலும், தமிழகம்தான் அதன் தாய்வீடு, நெய்வேலி தான் அதன் பிறப்பிடம் என்பதை மறந்ததில்லை.

உத்தரப்பிரதேச மின் நிலையத்துக்கு "நெய்வேலி உத்தர்பிரதேஷ்' மின் நிறுவனம் என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் எட்ட நிர்ணயித்துள்ள இலக்குகள் நிறைவுபெற்ற பின்னரும், தமிழகத்தில் குறிப்பாக நெய்வேலியில்தான் அதிகபட்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று அதில் தெரிவித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்வெட்டர் ரெடியா மக்களே.. நடுங்க வைக்கப்போகும் பனி.. எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!