மதுரை உசிலம்பட்டியில் காவலர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(40). 2009ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை பணி முடிந்த நிலையில் முத்துக்குமார் மற்றும் ராஜாராம் ஆகியோர் முத்தையன்பட்டி டாஸ்மார்க் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணனுக்கு முத்துக்குமார் அறிவுரை செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வெளியே வந்த முத்துக்குமார், ராஜாராம் ஆகியோர் அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: உசிலம்பட்டி காவலர் படுகொலை! போலீசுக்கே பாதுகாப்பு இல்லை! முதல்வர் தூங்குகிறாரா? அண்ணாமலை விளாசல்!
அப்போது அடையாளம் தெரியாத சிலர், பின்னால் வந்து காவல் முத்துக்குமாரை கல்லால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க வந்த வரது உறவினரான ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவலருக்கும் பாதுகாப்பு இல்லை என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் காவலர் முத்துகுமாரை கல்லால் அடித்து கொலை செய்தது கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து குற்றவாளி பொன்வண்ணனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதையும் படிங்க: மது, கஞ்சா இரண்டும் எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை தான் சான்று! அன்புமணி!
இந்நிலையில் பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்த பொன்வண்ணன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.