கவனத்திற்கு!! யுபிஎஸ்இ தேர்வு.. நாளையும் , நாளை மறுநாளும் மின்சார இரயில் இயக்கத்தில் மாற்றம்..

Published : Jun 03, 2022, 09:35 AM IST
கவனத்திற்கு!! யுபிஎஸ்இ தேர்வு.. நாளையும் , நாளை மறுநாளும் மின்சார இரயில் இயக்கத்தில் மாற்றம்..

சுருக்கம்

யுபிஎஸ்இ தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வார நாட்கள் அட்டவணையில் மின்சார இரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

யுபிஎஸ்இ தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வார நாட்கள் அட்டவணையில் மின்சார இரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் ஆரம்பநிலை தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தேர்வு நடைபெறுவதால், தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களின் வசதிக்காக வார நாட்கள் அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன் சென்னை செண்ட்ரல் மற்றும் அரக்கோணம், சென்னை - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி ஆகிய  மார்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களை வார நாட்கள் அட்டவணையில் நாளையும், நாளை மறுநாளும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க: ஆயிரம் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ்-க்கு கலைத் துறை வித்தகர் விருது அறிவிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!