ஆயிரம் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ்-க்கு கலைத் துறை வித்தகர் விருது அறிவிப்பு

Nandhini Subramanian   | Asianet News
Published : Jun 02, 2022, 09:14 PM IST
ஆயிரம் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ்-க்கு கலைத் துறை வித்தகர் விருது அறிவிப்பு

சுருக்கம்

இந்த விருது தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கலைஞர் பிறந்த தினமான ஜுன் 3 ஆம் தேதி அன்று வழங்கப்படும் அறிவிக்கப்பட்டு உள்ளது.   

தமிழ்த் திரை உலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” வழங்கப்படும் என தமிக அரசு அறிவித்து இருந்தது. இந்த விருது தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கலைஞர் பிறந்த தினமான ஜுன் 3 ஆம் தேதி அன்று வழங்கப்படும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது பற்றிய அறிவிப்பு தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. விருதாளரைத் தேர்வு செய்வதற்காக திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில்,  நடிகர் சங்கத் தலைவர் நாசர்,  திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

அதன்படி 2022-ஆம் ஆண்டிற்கான  கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பல்வேறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 90) தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம்:

திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர், நடிகைகள் என பலர் நடித்த சுமார் 1,000  திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர் ஆவார். தான் பிறந்த ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியை இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார்.  

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த  அனுபவம் ஒரு சாதனையாகும். முன்னாள் தமிழக முதல்வர்  கருணாநிதியின் பிறந்த தினமான நாளை (3.6.2022) ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது, பரிசுத் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கப்பட இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!