வடபழனி பிரபல உணவகத்தில் திடீர் சோதனை... 50 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல்..!

By Kevin Kaarki  |  First Published Jun 2, 2022, 7:55 PM IST

கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து உணவகத்தின் சமையல் அறை 15 நாட்கள் செயல்பட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். 


சென்னை வடபழனி 100 அடி சாலையில் யா மொய்தீன் பிரியாணி பெயரில் பிரபல தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. அசைவ உணவகமான யா மொய்தீன் சென்னை மட்டும் இன்றி தமிழ் நாடு முழுக்க பல கிளைகளை கொண்ட முன்னணி உணவகம் ஆகும். இந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உணவகத்தில் இருந்து 50  கிலோவுக்கும் மேல் கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து உணவகத்தின் சமையல் அறை 15 நாட்கள் செயல்பட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். 

Tap to resize

Latest Videos

மேலும் இது தவறை மீண்டும் செய்தால் உணவகத்திற்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் தெரிவித்து இருக்கிறார். 
 

திடீர் ஆய்வு:

undefined

முன்னதாக அசை உணவு சாப்பிட்டு மாணவர் உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக குற்றச்சாட்டு எழுந்த உணவகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது ஓட்டலில் வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அதே உணவகத்தில் இருந்து கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்து, அதனை பினாயில் ஊற்றி அழித்தனர். 

பறிமுதல்:

முன்னணி அசைவ உணவகத்தில் கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக கிண்டியில் உள்ள மற்றொரு பிரபல உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த கெட்டுப் போன இறைச்சி கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியில் திருமண நிகழ்ச்சிக்கு சமைப்பதற்காக பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட இறைச்சி பொருட்கள், சமைக்கும் போது துர்நாற்றம் வீசியதை அடுத்து மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இங்கு பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப் போன இறைச்சி உணவு பாதுகாப்பு ஆய்வகம் மற்றும் மெட்ராஸ் கால்நடை கல்லூரிக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

click me!