ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர்
இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி. ராவணனைக் கொன்ற பாவம் தீர மணலால் ஆன லிங்கத்தை வைத்து ராமன் பிரதிஷ்டை செய்தார். எனவே, ராமனே சிவனை வணங்கியதால், இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு ராமநாதசுவாமி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும் என்பது ஐதீகம். காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரத்தில் வழிபாடு நடத்துவதால் ஏராளமான வட மாநிலத்தவர்கள் இங்கு வருகை புரிவர்.
எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோருக்கு அநீதி: சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!
இந்த நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ராமேஸ்வரம் வந்த அவரக்ளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அமித்ஷா மனைவி சோனல்ஷா, மகன் ஜெய்ஷா மற்றும் அவரது உறவினர்கள் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் குருக்கள் கலசத்தில் இருந்த 22 தீர்த்தங்களின் புனித நீரை அவர்கள் மீது தெளித்தனர். இதையடுத்து, சுவாமி சன்னதி அருகே ருத்ர பூஜையில் பங்கேற்ற அவர்கள், பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையிலுக் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' பாதயாத்திரையைத் தொடங்கிவைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் ராமேஸ்வரம் வந்தார். அன்றைய தினம் ராமேஸ்வரத்தில் தங்கிய அவர், மறுநாள் அதிகாலை ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றார். அதன் தொடர்ச்சியாக, அவரது குடும்பத்தினர் ராமேஸ்வரம் வருகை புரிந்து தரிசனம் செய்துள்ளனர்.