அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி; உடன்வந்த நண்பர்களுக்கு பலத்த காயம்...

 
Published : May 22, 2018, 10:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி; உடன்வந்த நண்பர்களுக்கு பலத்த காயம்...

சுருக்கம்

Unidentified vehicle hits and kills youth Heavy injury to his friends ...

காஞ்சிபுரம்
 
காஞ்சிபுரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் அதிபயங்கரமாக மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது நண்பர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (18), சின்னராசு (20), அஜீத்குமார் (18). இவர்கள் மூவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இவர்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

இவர்கள் ஊரப்பாக்கம் அருகே செல்லும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அதிபயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர்களான சின்னராசு, அஜீத்குமார் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

இவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

நாளை வெள்ளிக்கிழமை அதுவுமா.. தமிழகத்தில் முக்கிய இடங்களில் 8 மணிநேரம் மின்தடை அறிவிப்பு!
கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!