உதயநிதி தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், வடிவேலு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மாமன்ன படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பாடல், ட்ரெயலர் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற அழுத்தமான திரைக்கதைகளை கொண்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் மாமன்னன் எப்படி இருக்க்கும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
மாமன்னனை பார்த்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டித்தழுவி கொண்டாடினார் - மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
இந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளன. முன்னணி திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி, முதலமைச்சர் ஸ்டாலினும் மாமன்னன் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் மாமன்ன திரைப்படத்தை, திமுக நிர்வாகிகளுடன் கண்டு களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ அமைச்சராக இருந்து கொண்டு, திரைப்படங்களில் நடிக்க கூடாது என்ற சட்டம் கிடையாது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும். 'மாமன்னன்' கடைசி படம் என்று கூறியிருப்பதை உதயநிதி மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாமன்னன்' திரைப்படம் தடைகள் எல்லாம் தாண்டி மிக சிறப்பாக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் எனவும் அதன்பின்னர் படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். கடைசி படம் என்பதால் மாரி செல்வராஜ் தன்னை வைத்து படத்தை இயக்க ஒப்புக்கொண்டார் என்று உதயநிதியே சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்