தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்தாவும் இந்தியா கூட்டணி குறித்தும் விவாதித்ததாவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
வியாழக்கிழமை பிரதமர் மோடியைச் சந்தித்த பின், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரையும் அமைச்சர் உதயநிதி சந்தித்துப் பேசினார். பிறகு செய்தியாளர்களின் பேசிய அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினார்.
"ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை மணிப்பூரில் இருந்து விரைவில் தொடங்குவது பற்றிப் பேசினார். நாங்கள் பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம்" எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
பிரதமர் மோடியைச் சந்தித்து கேலோ இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்!
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். pic.twitter.com/Ktmt4qUJC9
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதே நாளில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, "ராகுல் காந்தி அதைப் பற்றியும் பேசினார். ஆனால், அதைப்பற்றி என்னால் இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது" எனக் குறிப்பிட்டார்.
பின்னர் ட்விட்டரில் ராகுல் காந்தியுடனான சந்திப்பு பற்றி பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், "காங்கிரஸ் தலைவர் சகோதரர் ராகுல் காந்தியை இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அன்னை சோனியா காந்தியிடம் நலம் விசாரித்தேன்" என்று கூறியுள்ளார்.
"தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்தார். நாட்டின் மதச்சார்பின்மையை நெறியைப் பாதுகாப்பதற்கான இந்தியா கூட்டணியின் முன்னேற்றம் குறித்தும் சுருக்கமாக விவாதித்தோம்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு