8 மணி நேரம் ஜல்லிக்கட்டு வேண்டும், ஆன்லைன் டோக்கனை ரத்து செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

By Velmurugan s  |  First Published Jan 4, 2024, 7:50 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் 8 மணி நேரம்  ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று வழங்கப்பட்டது. அந்த மனுவில், “மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களின் நடைபெறுவது போல் மாலை 4 மணி வரை போட்டி நடத்த வேண்டும். அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. 750 காளைகள் வரை அவிழ்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். 

சென்னை - நாகர்கோவில் - சென்னை; வந்தேபாரத் ரயிலை தினமும் இயக்க பயணிகள் கோரிக்கை

Latest Videos

ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கும், காளை வளர்ப்போருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் நுழைவுச்சீட்டினை ஆன்லைன் மூலம் வழங்கும் முறையை மாற்றி, கால்நடை பராமரிப்பு துறை ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு நடத்தும் ஊர் விழா கமிட்டி சார்பில் அனுமதி சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரையாண்டு தேர்வில் 60% மதிப்பெண் எடுத்த மாணவன்;  பெற்றோர் நன்றாக படிக்க சொன்னதால் தற்கொலை 

உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பில்லம நாயக்கன்பட்டி, கொசவபட்டி, மறவப்பட்டி, உலகம்பட்டி உட்பட பல ஊர்களில் இருந்து மாடுபிடி வீரர்கள், மாடு  வளர்ப்பவர்கள் என 50க்கும்  மேற்பட்டோர் வருகை தந்து தாங்கள் கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வழங்கினர்.

click me!