திமுகவின் மாணவர் அணி, மருத்துவ அணி போல் பாஜகவின் அணிகள் தான் IT,ED.!மத்திய அரசை விளாசும் உதயநிதி

By Ajmal Khan  |  First Published Nov 3, 2023, 1:27 PM IST

அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் சோதனையை சட்ட ரீதியாக சந்திப்போம் என தெரிவித்த அமைச்சர் உதயநிதி, திமுகவில் மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவ அணி என பல அணிகள் உள்ளது. அதே போல பாஜகவின் அணி தான் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை என விமர்சித்தார். 
 


நீட் தேர்வு- கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி கடந்த வாரம் தொங்கினார். இதனையடுத்து இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரியிடம் கையெழுத்து பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் விலக்கு நமது இலக்கு என்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் திமுக கழகத்தின் இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி சேர்ந்து பத்து நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் அதை வெகு நாட்களாக கையில் வைத்திருந்தார் தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் தற்போது அந்த தீர்மானம் ஜனாதிபதியிடம் உள்ளது. தற்போது அவருடைய கையெழுதிற்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

கூட்டணி தலைவர்களிடம் கையெழுத்து

கடந்த ஆறு வருடத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் அனிதாவிலிருந்து ஜெகதீசன் வரை 22 குழந்தைகள் இறந்துள்ளனர். திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை நீட்டை விளக்குவோம் என்று கூறியுள்ளோம் அதற்காக இந்த அரசு உழைத்து வருகிறது. தற்போது வரை மூன்று லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளோம். தபால் கார்டுகளில் இதுவரை 10 லட்சம் காடுகள் அடித்து தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்பட்டது.  அதில் இதுவரை 8 லட்சம் கார்டுகளிள் கையெழுத்து வாங்கி உள்ளோம்.

திமுக கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி முதலிய அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்க வந்தேன்.மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களிடமும் கையெழுத்து பெற உள்ளோம் என்று தெரிவித்தார். 

சட்டப்படி சந்திப்போம்

திமுக கூட்டணியில் இல்லாத அனைத்து கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களையும் சந்தித்து கையெழுத்து பெற உள்ளதாக தெரிவித்தார். அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,ரெகுலராக நடைபெறுவது தான். திமுகவில் மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவ அணி என பல அணிகள் உள்ளது. அதே போல பாஜகவின் அணி தான் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை. எனவே இந்த சோதனைகளை சட்டப்படி சந்திப்போம் என உதயநிதி கூறினார்.

இதையும் படியுங்கள்

 அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள், எம்.பிகளை குறிவைக்கும் IT, ED.!இதுவரை சோதனையில் சிக்கியது என்ன.? வெளியான தகவல்

click me!