Chennai Flood : வெள்ள நிவராண தொகை உயர்த்தப்படுமா.? டோக்கன் எப்போது வழங்கப்படும்.? உதயநிதி கூறிய முக்கிய தகவல்

By Ajmal KhanFirst Published Dec 11, 2023, 6:35 AM IST
Highlights

எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் நண்பர் தானே அவர் கூறி வெள்ள நிவாரண நிதியை உயர்த்தி வாங்கி தந்தால் தமிழ்நாட்டில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முடியும் என உதயநிதி தெரிவித்துள்ளார். 

சென்னை வெள்ள பாதிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்டது. வரலாறு காணாத வகையில் இரண்டு நாட்களில் 70 செ.மீட்டர் அளவிற்கு மழையானது கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக சென்னையில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருந்த போதும் இந்த வெள்ள பாதிப்பால் மனித உயிரழப்பு, உடமைகள் இழப்பு என மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது.

Latest Videos

நிவாரணத்தொகை உயர்வா.?

வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்கள் அணைவருக்கும் 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் மனித உயிரழப்புக்கு 5 லட்சமும், வீடு மற்றும் கால்நடைகள் உயிரிழப்புக்கும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை போதாது என்றும் கூடுதலாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை தொடர்பாக  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,  எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிய அரசின் நண்பர் தானே அவர் கூறி நிதியை உயர்த்தி தந்தால் தமிழ்நாட்டில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முடியும்.

நிவாரணத்தொகை எப்போது வழங்கப்படும்

தற்போது வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசு  கொடுத்த நிதி தமிழ்நாட்டிற்கு  போதுமானதாக இல்லை. பொதுமக்கள் 6000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கியதற்கு நன்றியை தெரிவித்து வருவதாக கூறினார்.  வெள்ள நிவராணத்திற்காக நியாயவிலைக்கடைகளில் வருகின்ற 16ஆம் தேதி முதல் நிவாரண தொகை பெறுவதற்கு  டோக்கன் வழங்கப்படும். மேலும் வெள்ள நிவாரண தொகை 10 நாட்களில் முழுமையாக கொடுத்து முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

Tamilnadu Rain : தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை.! எந்த எந்த மாவட்டங்கள்.? வானிலை மையம் தகவல்

click me!