தஞ்சையில் நடுவீட்டில் வெடித்துச் சிதறிய வாஷிங் மெஷின்! அறையில் இருந்த பொருட்கள் மொத்தமும் தீயில் நாசம்!

By SG Balan  |  First Published Dec 10, 2023, 3:47 PM IST

விபத்து நடந்த அறையில் இருந்த சோபா, டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்ட பிற பொருட்களும் தீயில் நாசமாகிவிட்டன. நல்வாய்ப்பாக அந்த அறையில் யாரும் இல்லாத காரணத்தால், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் கவாஸ்காரர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுருநாதன். இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். சிவகுருநாதன் தனது வீட்டின் கீழ் தளத்தில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் இருவரும் வசித்து வருகின்றனர். சிவகுருநாதன் மாடியில் தன் மனைவி புவனேஸ்வரியுடன் வசிக்கிறார்.

இந்நிலையில், ஞாயிறு அதிகாலை புவனேஸ்வரி வீட்டில் உள்ள வாஷிங் மிஷினில் துணியைப் போட்டுவிட்டு வாக்கிங் சென்றுள்ளார். அவர் வீட்டை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வாஷிங் மெஷின் பயங்கரமான சத்தத்துடன் வெடித்துச் சிதறி, தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

Latest Videos

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சிவகுருநாதன் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்துள்ளார்.

வாஷிங் மெஷின் வெடித்து தீப்பற்றி எரிவதைக் கண்ட அவர், உடனே தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தீயணைப்புத்துறையின் விரைவாக சம்பவ இடத்திற்குச் சென்று பற்றி எரிந்த தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.

இந்த விபத்து நடந்த அறையில் இருந்த சோபா, டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்ட பிற பொருட்களும் தீயில் நாசமாகிவிட்டன. நல்வாய்ப்பாக அந்த அறையில் யாரும் இல்லாத காரணத்தால், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வாஷிங் மெஷின் வெடிப்புக்கு மின்கசிவு காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.வாஷிங் மெஷின் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் கீழவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்க்கை முடித்தால் காசு... டெலிகிராம் மூலம் 18 லட்சம் பணத்தைச் சுருட்டிய கும்பல்!

click me!