குடும்ப தகராறில் தாய், மகள் இருவரும் கல்லணையில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை

Published : Nov 27, 2023, 02:24 PM IST
குடும்ப தகராறில் தாய், மகள் இருவரும் கல்லணையில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை

சுருக்கம்

தஞ்சையில் குடும்ப தகராறு காரணமாக தாய், மகள் இருவரும் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை விளார் சாலை தில்லை நகர் லெனின் தெருவில் வசித்து வந்தவர் பத்ம ஜோதி. 38 வயதான இவர் செந்தில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

செந்தில்குமார் மூத்த மகளுடன் திருவாருரில் வசித்து வருகிறார். பத்மஜோதி இரண்டாவது மகள் தீபிகாவுடன் தஞ்சையில் வசித்து வந்தார். இந்த நிலையில் தஞ்சை கல்லணை கால்வாயில் மிதந்து வந்த இரண்டு பெண்களின் சடலங்களை மீட்ட பொது மக்கள் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் விசாரணையில், பத்ம ஜோதி, அவரது இளைய மகள் தீபிகாவும் என்பது தெரிய வந்தது. குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினை காரணமாக தாய், மகள் இருவரும் இடுப்பில் துணியை கட்டிக் கொண்டு ஆற்றில் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஏழுமலையானை தரிசித்த பிரதமர் நரேந்திர மோடி

தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது! ஆசிரியை கொலை! கைதானவர் சிறையில் விபரீத முடிவு! பதறிய போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய கோர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி! 2 பேர் படுகாயங்களுடன் அலறல்!