டாஸ்க்கை முடித்தால் காசு... டெலிகிராம் மூலம் 18 லட்சம் பணத்தைச் சுருட்டிய கும்பல்!

By SG BalanFirst Published Dec 9, 2023, 6:13 PM IST
Highlights

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் என்று வரும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அறிமுகமில்லாத நபரிடம் இருந்து வரும் லிங்க் எதையும் கிளிக் செய்யக் கூடாது எனவும் சைபர் க்ரைம் போலீசார் கூறுகின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த எஞ்சினியரிடம் ஆன்லைன் டாஸ்க்கை முடித்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர், ரெட்டிபாளையம் சாலை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் இன்ஜினியரிங் பட்டதாரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் சென்ற அக்டோபர்  1ஆம் தேதி முன்பின் தெரியாத நபரிடமிருந்து, டெலிகிராமில் மெசேஜ் வந்துள்ளது. அந்த நபர் வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் சின்ன டாஸ்குகளைச் செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.

விமான நிறுவனத்திற்கு ரேட்டிங் வழங்குவதன் மூலம் தினமும் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட நபரும் அந்த மெசேஜை நம்பி சில டாஸ்குகளை செய்து, சில நாட்களில் சில ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளார். அப்போது, இன்னும் சில டாஸ்குகளைச் செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதலீட்டுக்கு ஏற்ப அதிக லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி பல தவணைகளாக ரூ.18.19 லட்சம் பணத்தை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். பின்னர் பல டாஸ்க்குகளைச் செய்த பின்பும் பணம் ஏதும் கிடைக்கவில்லை. டெலிகிராமில் பணம் பெற்ற கும்பலைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

தான் ஏமாந்து போனதை உணர்ந்த அவர் தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் என்று வரும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அறிமுகமில்லாத நபரிடம் இருந்து வரும் லிங்க் எதையும் கிளிக் செய்யக் கூடாது எனவும் சைபர் க்ரைம் போலீசார் கூறுகின்றனர்.

மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

click me!