2 சன்னியாசினிகளை கூட்டாக சேர்ந்து கதறக் கதறக் கற்பழித்த காமுகர்கள்... கண்ணீர்விட்டு அழுதும் விடாத கோரம்!

Asianet News Tamil  
Published : Jun 17, 2018, 04:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
2 சன்னியாசினிகளை கூட்டாக சேர்ந்து கதறக் கதறக் கற்பழித்த காமுகர்கள்... கண்ணீர்விட்டு அழுதும் விடாத கோரம்!

சுருக்கம்

Two sadhvis accuse persons of gangrape

இரண்டு சன்னியாசினிகளை கூட்டாக கற்பழித்த 4 பேர் மீது அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜாங்ஜிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையதிற்கு இரண்டு சன்னியாசினிகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி வந்தடைந்தனர். அவர்களை அம்மாவட்டத்தில் உள்ள ஆசிரம் ஒன்றிற்கு காரில் அழைத்து செல்ல அவர்களுக்கு அறிமுகமான திலிப்சந்த் படேல் என்பவர் ரயில் நிலையம் வந்திருந்தார். 

அப்போது சன்னியாசினிகள் அழைத்து சென்ற அவர்,  ஆசிரமம் செல்வதற்கு பதிலாக குழந்தை ஒன்றின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தர வேண்டும் என இரண்டு சன்னியாசினிகளை எமாற்றி கோர்பா  மாவட்டம் செல்லும் வழியில் காரை ஓட்டி சென்றுள்ளார் படேல். அங்கு துப்பாக்கி முனையில் படேல் உள்பட மேலும் மூவர் சேர்ந்து சன்னியாசினிகளை கூட்டாக கற்பழித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது,  சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டே சென்று விட வேண்டும் என சன்னியாசினிகளுக்கு அந்த காமுகர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சன்னியாசினிகளில் ஒருவர் அம்மாநில முதல்வர் ரமன் சிங்கிற்கு புகார் மனு ஒன்றை எழுதியிருந்தார்.  அந்த புகார் மனு தொடர்பாக மாநில அரசின் அறிவுறுத்தலின்படி குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி