அந்த பேச்சுக்கே இடமில்லை... பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்! தாடி பாலாஜியின் மனைவி

Asianet News Tamil  
Published : Jun 17, 2018, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
அந்த பேச்சுக்கே இடமில்லை... பணத்திற்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்! தாடி பாலாஜியின் மனைவி

சுருக்கம்

I will attend the Biggboss concert for money - Thadi Balaji wife Nithya

பாலாஜியுடன் மீண்டும் சமாதானமாகி சேர்ந்து வாழ வேண்டும் எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை என்றும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் எனது பொருளாதார தேவை பூர்த்தியாகும் என்ற எண்ணத்திலேயே நான் கலந்து கொள்கிறேன் என்று தாடி பாலாஜியினி மனைவி நித்யா கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 2, நாளை முதல் துவங்க உள்ளது.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க போவது யார் யார்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் பிரபலங்கள் குறித்து தகவல் வெளியாகின. அந்த பிரபலங்கள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளன.

1. யாஷிகா ஆனந்த், 2. ஆனந்த் வைத்தியனாதன், 3. தாடி பாலாஜி, 4. நித்யா தாடி பாலாஜி, 5. ஜனனி ஐயர், 6. டேனியல், 7. பொன்னம்பலம், 8. ஐஸ்வர்யா தத்தா, 9. மமதி சாரி, 10. மஹத், 11. மும்தாஜ், 12. பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், 13. டேனியல் பாலாஜி, 14. பரத் ஆகியோரோ அந்த பிரபலங்கள் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளன. 

சின்னத்திரையில் வலம் வரும் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 2-வில் தாடி பாலாஜி - நித்யா இருவரும் கலந்து கொள்கின்றனர். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்கும் நிலையில் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் தான் ஏன் கலந்து கொள்கிறேன் என்பது குறித்து தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறும்போது, பாலாஜியுடன் மீண்டும் சமாதானமாகி சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை. அவர் திருந்திவிட்டேன் என்று பலமுறை கூறியதை கேட்டு ஏமாந்துவிட்டேன்.

எனக்கும் எனது மகளுக்கும் பொருளாதார தேவை அதிகமாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் அந்த தேவை பூர்த்தியாகும். என் மகள் சம்மதம் தெரிவித்ததாலேயே நான் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். என்னைத் தேர்வு செய்த விஜய் டிவிக்கு நன்றி என்று நித்யா கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி