லாரி மோதி நடைப் பயிற்சி சென்ற 2 பேர் பலி

 
Published : Oct 24, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
லாரி மோதி நடைப் பயிற்சி சென்ற 2 பேர் பலி

சுருக்கம்

two persons died in lorry accident near kadayanallur

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே லாரி  மோதிய விபத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட 2 பேர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பெரிய தெருவைச் சேர்ந்த மொன்னா முகம்மது என்பவர்  தினசரி நடைப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அவர் இன்று  அதிகாலை 6.30 மணி அளவில்  கடையநல்லூர் அட்டைக்குளம் அருகே சென்ற போது  தென்காசியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி திடீர் என டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியது. 

மேலும்,மேலக்கடையநல்லூர் காளியம்மன் கோவில் தெருவை சார்ந்த கடற்கரை (65) என்பவரும் உடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவர் மீதும் லாரி மோதி  இருவரும்  தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன் பின்னரும் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் நின்ற ஆட்டோ, சைக்கில் ஆகியவற்றில் மோதி குளத்தில் கவிழ்ந்தது 

தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்த காவல் துறை மற்றும்  தீயணைப்பு துறையினர்  பலியானவர் உடல்களை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தப்பி ஓடிய லாரி டிரைவரை கடையநல்லூர் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு