
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த காசி தர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள கந்து வட்டிக் கொடுமை தான் காரணம் என்று கூறப்பட்டது.
கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் இசக்கிமுத்து ரூ.1.30 லட்சம் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.2.30 லட்சம் செலுத்திய பிறகும் அவரிடம் கூடுதல் வட்டி கேட்டு கந்து வட்டிக்காரர் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தான் இசக்கி முத்துவும் அவரது குடும்பத்தினரும் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது
இந்நிலையில், தீக்குளிப்புக்கு காரணமாக இன்று காலை வரை வேறு விதமாக பேசப்பட்ட வந்த இந்த சம்பவம் குறித்து தற்போது நெல்லை எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்
நேற்று போலீசார் மேற்கொண்ட விசாரணையின் முடிவில், இசக்கிமுத்து, சுப்புலட்சுமி குடும்பத்தினர் பலரிடமிருந்து பணத்தை கடனாக பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.இதனை தொடர்ந்து எஸ்.பி.விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது இசக்கிமுத்து குடும்பத்தினர் வீடு கட்ட ரூ.85,000-ஐ கடனாக பெற்றுள்ளனர்
குழந்தைகளின் காதுகுத்து நிகழ்சிக்காக ரூ.60 ஆயிரம் கடனாக பெற்று உள்ளனர்
இது போன்று பலரிடம் கடனாக அதிகளவில் பணத்தை பெற்று வந்துள்ளனர் இசக்கிமுத்து குடும்பத்தினர்
இதற்கு அடுத்தபடியாக, இந்த சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது
மேலும், இது குறித்த முழு விவரத்தை முழு விசாரணை முடிந்த பிறகே, அதிகாரபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
வருவாய் துறையும் காவல் துறையும் இணைந்து இந்த விசாரணையை மேற்கொண்டு உள்ளதாகவும் நெல்லை எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த கோர சம்பவம் குறித்து முழுத்தகவல் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது