
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனின் பரோல் காலம் முடிவடைந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவர் இன்று வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரின் தகப்பனார் பேரறிவாளனின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம தேதி ஒரு மாத பரோலில் அவர் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஒரு மாத கால பரோல் முடிவடைய சில நாட்கள் இருந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பேரறிவாளனின் பரோல் இன்றுடன் முடிவடைகிறது. அவர் இன்று மாலை 5 மணிக்குள், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்படவேண்டும். இந்த நிலையில், பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயர் அற்புதம்மால் முதலமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார். முதலமைச்சரிடம் இருந்து தனக்கு நல்ல செய்து வரும் என்றும் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அரசு தரப்பில் இருந்து ஒப்புதல் கிடைக்காத நிலையில் பேரறிவாளன் இன்று மீண்டும் சிறைக்கு செல்கிறார்.
பேரறிவாளனின் பரோல் காலம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடையும் நிலையில், அவர் இன்று பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.