தீபாவளியை கொண்டாடுவதற்கு ஆசை ஆசையாக சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி இருவர் பலி..

Published : Oct 23, 2022, 02:46 PM IST
தீபாவளியை கொண்டாடுவதற்கு ஆசை ஆசையாக சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி இருவர் பலி..

சுருக்கம்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாவதற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த இளைஞர்கள், லாரி மீதி மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் தாலுகாவிற்குட்பட்ட உலகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாயவன். இவர் சென்னையில் பொக்லைன் இயக்கும் பணி செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர் அருளும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக, சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க:கோவையில் வெடித்தது யாருடைய கார்.? இறந்த மர்ம நபர் யார்..? சதியா..? விபத்தா..? திணறும் போலீஸ்...!

அதிகாலையில் செஞ்சி சேத்பட் சாலையில் வழியாக சென்றுக்கொண்டிருந்த போது, வளத்தி அருகே அண்ணமங்களம் பகுதியில் எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த லாரி மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பரிதாபமாக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபாவளி பண்டிகையை  கொண்டாட சென்ற இளைஞர்கள்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க:வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் ..110 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று.. வானிலை மையம்

PREV
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!