வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் ..110 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று.. வானிலை மையம்

By Thanalakshmi V  |  First Published Oct 23, 2022, 1:47 PM IST

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 12 மணி நேரத்தில்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ புயலாக வலுபெறக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 


இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நேற்று தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌ இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று 08.30 மணி அளவில்‌ மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலைகொண்டுள்ளது. 

இது வடமேற்கு திசையில்‌ நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ புயலாக வலுபெறக்கூடும்‌. அதன்‌ பின்னர்‌ வடக்கு- வட கிழக்கு திசையில்‌ நகர்ந்து அக்டோபர்‌ 25ஆம்‌ தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில்‌ டிங்கோனா திவு மற்றும்‌ சந்திவிப்‌ இடையில்‌ கரையை கடக்கும்‌.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:கோவையில் கோயில் அருகே வெடித்த கார்...! சதி செயல் காரணமா..? போலீசார் தீவிர விசாரணை

23.10.2022 மற்றும்‌ 24.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.10.2022 முதல்‌ 27.10.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:மீன் வரத்து அதிகரித்ததால் குறைந்த விலை..! காசிமேட்டில் குவிந்த பொதுமக்கள்

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

23.10.2022: தென்‌ கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.
ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌

24.10.2022: மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, வடக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல்‌ 90 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

25.10.2022: வடக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மேற்கு வங்காள- வங்கதேச கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல்‌ 100 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. ஒரிசா கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 66 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!