மீன் வரத்து அதிகரித்ததால் குறைந்த விலை..! காசிமேட்டில் குவிந்த பொதுமக்கள்

By Ajmal KhanFirst Published Oct 23, 2022, 12:42 PM IST
Highlights

அதிக அளவு மீன்களோடு மீனவர்கள் கரைக்கு திரும்பியதால், காசிமேட்டில் மீன்களின் விலையானது பலமடங்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீன்களின் வரத்து அதிகரிப்பு

புரட்டாசி மாதம் முடிந்து நாளை தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதலே மீன் வாங்க பொதுமக்கள் மற்றும் பெரிய,சிறிய வியாபாரிகள் குவிந்தனர். மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் சென்னை காசிமேட்டில் மீன்களின் விலையானது குறைந்து உள்ளதால் மீன் பிரியர்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி தாக்கிய கொடூரம்..! திருப்பதி டோல்கேட்டில் மர்ம நபர்கள் தாக்கியதால் பரபரப்பு

குறைந்த மீனின் விலை

கடந்த ஒரு மாதமாக புரட்டாசி காரணமாக அசைவ பிரியர்கள் அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருந்தனர். இந்தநிலையில் புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டினர். கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் மீன்களின் விலை கணிசமான அளவில் குறைந்து காணப்பட்டது. 

மீன்களின் விலைப்பட்டியல்
கடந்த வாரம்  வஞ்சிரம் 800 & இந்த"வாரம்"600
                              சங்கரா             - 600& 450
                              வவ்வா               - 500&400
                              காணங்கத்தை- 300&200
                               இறால்                -500&300
                               நண்டு                - 400&250

இதையும்ப படியுங்கள்

Diwali: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..

click me!