விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடனும் கொண்டாட்டங்களுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மூன்று நாள் பூஜைகளுக்கு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
undefined
மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !
இந்நிலையில் விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு அருகே புதுராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் இவருக்கு கிருத்திகா தேவி என்கிற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு சாய்ஸ்ரீ என்கிற மகள் இருக்கிறார்.
இந்த தம்பதி வீட்டில் 2 கிளிகளை வளர்த்து வருகிறார்கள். அந்த இரண்டு கிளிகளுக்கும் அவர்களது மகள் பேசவும், பாடவும் பயிற்சி அளித்திருக்கிறார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 2 தினங்களுக்கு முன்னர் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். குடும்பத்தினர் பூஜை செய்வதை பார்த்த 2 கிளிகளும், தாங்களாகவே பூக்களை கிள்ளி விநாயகருக்கு போட்டு அர்ச்சனை செய்திருக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
விநாயகருக்கு பூக்களால் அர்ச்சனை செய்த கிளிகள்.. தமிழ்நாட்டில் அதிசயம் ! pic.twitter.com/L7XnfwY4TM
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதுகுறித்து பேசிய அந்த குடும்பத்தினர், ' 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் முன்பு நோய் பாதிப்பால் நடக்க முடியாமல் இருந்த கிளியை எடுத்து வந்து சிகிச்சை அளித்து, குணப்படுத்தினோம். பிறகு கிளி வெளியே சென்றாலும் தானாக வீட்டுக்கு வந்து விடும். மேலும், இன்னொரு கிளியையும் வாங்கி வளர்த்து வந்தோம்.
இரண்டு கிளிகளும் எங்களது வீட்டில் நண்பர்களாக வளர்கின்றன. இரு கிளிகளுக்கும் பேசவும், பாடவும் பயிற்சியளித்துள்ளோம்' என்று கூறினார்கள். கிளிகளின் இந்த செயல் அக்கம் பக்கத்தினர் மட்டுமல்ல, இந்த காணொளி பார்க்கும் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?