கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. பள்ளி, கல்லூரிகள் கிடையாது.. எப்போது தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Sep 3, 2022, 5:51 PM IST
Highlights

ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 8 ஆம் தேதி( வியாழன்கிழமை) அளிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு பதிலாக, செப்டம்பர் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி  தொடங்கிய பண்டிகை செப்டம்பர் 8 ஆம் தேதி வரை, 10 நாட்கள் கொண்டாடப்படும். இத்திருநாளையொட்டி, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக, மலையாள மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ண பூக்கள், கோலங்களால் அலங்கரித்து மகிழ்வர். பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.

மேலும் படிக்க:ஆசிரியர் தகுதி தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.. தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் கேரளா மட்டுமின்றி எல்லை மாவட்டங்களான கோவை , கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மலையாள மக்களால ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டப்படும். கல்வி மற்றும் வேலை நிமித்தமாக தலைநகர் சென்னையில் குடியேறியுள்ள மலையாள மக்களும் தங்களது இல்லங்களில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடுவர். 

இதனால் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி (வியாழக்கிழமை) சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும், அதற்கு பதிலாக செப்டம்பர் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:ஹாப்பி நியூஸ்!! வரும் செப்.,8 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் கிடையாது.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ..?

click me!