திருப்பூர் சாய ஆலையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி! 2 பேர் கைது!

Published : May 22, 2025, 09:51 AM IST
arrest

சுருக்கம்

திருப்பூரில் சாய ஆலையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலியாயினர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Toxic Gas Attack Dye Factory Tiruppur: தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் திருப்பூரில் ஏராளமான சாயப்பட்டறைகள் உள்ளன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். திருப்பூர் அருகே கரைப்புதூரில் நவீன் என்பவருக்கு சொந்தமான சாயப்பட்டறை உள்ளது. இங்கு 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை 7 அடி ஆழமுள்ள சாயக் கழிவுநீர் தொட்டி யை சுத்தம் செய்யும் பணியில் சுண்டமேட்டை சேர்ந்த சரவணன் (30), வேணு கோபால் (31), ஹரி (26) மற்றும் சின்னச்சாமி (36) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில், 4 தொழிலாளர்களும் மயக்கம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரவணன் மற்றும் வேணு கோபால் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரியும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

சாய ஆலை ஊழியர்கள் 2 பேர் கைது

இந்நிலையில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு தொடர்பாக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் சாயப்பட்டறையின் இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். சின்னக்கரையைச் சேர்ந்த மேலாளர் தனபால் (50), மேற்பார்வையாளர் பல்லடத்தைச் சேர்ந்த அரவிந்த் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பல்லடம் போலீசார் ஆலை உரிமையாளர் நவீன், சின்னசாமி, மேலாளர் தனபால் மற்றும் மேற்பார்வையாளர் அரவிந்த் மீது வழக்குப் பதிவு செய்தனர். நவீனை போலீசார் தேடி வருகின்றனர். சிகிச்சைக்குப் பிறகு சின்னசாமி கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

அரசு வேலை வழங்க விசிக கோரிக்கை

சின்னசாமியின் மனைவி ஜோதிமணி, தனது கணவரை இந்த வழக்கில் சேர்க்கக்கூடாது என்றும் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். இதற்கிடையில், விசிக மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மாவட்ட நிர்வாகத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!