TVS குழும தலைவர் வேணு சீனிவாசனை குறி வைக்கும் பொன்.மாணிக்கவேல்! காரணம் என்ன தெரியுமா?

First Published Aug 10, 2018, 10:56 AM IST
Highlights

இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வர்களில் முக்கியமானவரும், பாரம்பரியமிக்க டி.வி.எஸ் குழுமங்களின் தலைவருமான வேணு சீனிவாசன் பெயர் சிலை கடத்தல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வர்களில் முக்கியமானவரும், பாரம்பரியமிக்க டி.வி.எஸ் குழுமங்களின் தலைவருமான வேணு சீனிவாசன் பெயர் சிலை கடத்தல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மிகவும் பழமையான கோவில்களில் ஒன்று. இந்த கோவில்களில் உள்ள சிலைகள் பல வரலாற்றை கடந்து நிற்பவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட சிலைகள் பல மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் உள்ளன. அந்த வகையில் சிவனின் மனைவியான பார்வதியை மயிலாக சித்தரித்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலை ஒன்று இந்த கோவிலில் உண்டு.

 அதாவது பார்வதி மயிலாக வந்து சிவனுக்கு பூஜை செய்யும் வகையில் ஒரு சிலை செய்யப்பட்டு அந்த சிலை மூலவர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்தது. கல்லால் செய்யப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான அந்த மயில் சிலை தனது வாயில் குவளை மலரை வைத்திருக்கும். அதாவது குவளை மலரால் தனது கணவரான சிவனுக்கு பார்வதி பூஜை செய்வது போன்று அந்த சிலை இருக்கும். கபாலீஸ்வரர் கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களால் மட்டுமே இந்த பார்வதி மயில் ரூபத்தில் இருக்கும் கற்சிலையை அறிந்திருக்க முடியும். 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கபாலீஸ்வர் கோவிலில் கும்பாபிசிகேம் நடைபெற்றது. கும்பாபிசேகம் எல்லாம் முடிந்த சில மாதங்களுக்கு பிறகு பக்தர் ஒருவர், மூலவர் அருகே இருக்கும் மயில் சிலையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டுள்ளார். அதாவது மயில் வாயில் குவளை மலர் இருப்பதற்கு பதிலாக பாம்பு போன்ற வேறு ஒரு அமைப்பு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிலை மாற்றம் குறித்து சக பக்தர்களிடம் கூறிய போது ஒரு சிலர் அதனை ஏற்று அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் புகாரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பிறகு நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார் கபாலீஸ்வரர் கோவிலில் மூலவர் அருகே இருந்த மயில் சிலை மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் வழக்கை அதிகாரப்பூர்வம் இல்லாத வகையில் பொன்.மாணிக்கவேல் விசாரித்தார்.

   அப்போது தான் கும்பாபிசேகத்திற்கு பிறகு மயில் சிலை மாயமானதில் மர்மம் இருப்பதை உணர்ந்து கொண்டார். மேலும் அறங்காவலர் குழு தலைவராக இருந்து கும்பாபிசேகத்தை நடத்திக் கொடுத்த டி.வி.எஸ் வேணு சீனிவாசன் மீதும் பொன்.மாணிக்கவேலுக்கு சந்தேகம் வந்தது. அத்துடன் வேணு சீனிவாசன் அறங்காவலர் குழு தலைவராக இருந்து கும்பாபிசேகம் நடத்திய ஸ்ரீரங்கம் கோவிலிலும் உற்சவர் சிலை மாற்றப்ப்டடதாக புகார் எழுந்ததும் பொன்.மாணிக்கவேல் கவனத்திற்கு வந்தது. அதாவது டி.வி.எஸ் சீனிவாசன் அறங்காவலர் குழு தலைவராக இருந்து கும்பாபிசேகம் செய்து வைத்த இரண்டு கோவில்களிலும் பழமையான சிலைகள் இரண்டு மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் டி.வி.எஸ் சீனிவாசனை எந்த நேரத்திலும் பொன்.மாணிக்கவேல் கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பயந்து போன வேணு சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர அவசரமாக முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

 10 ஆயிரம் பேரை தொழிலாளர்களாக கொண்ட டிவிஎஸ் குழுமங்களின் தலைவராக உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம், ஆந்திராவில் 100 க்கும் மேற்பட்ட கோவில்களை அறக்கட்டளை நிதியில் புனரமைத்து கொடுத்துள்ளதாகவும், அந்தவகையில் கும்பேஸ்வரம் மற்றும் மயிலாப்பூர் கோவில்களின் திருப்பணி கமிட்டி உறுப்பினராக கடந்த 2004 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கும்பேஸ்வரம் கோவிலின் பக்தரான அறங்காவலர் குழுதலைவராக இருந்து ஸ்ரீரங்கம் கும்பேஸ்வரம் கோவிலில் 25 கோடி ரூபாய் மதிப்பில் முழுமையாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ளதாகவும், இதில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக குற்றஞ்சாட்டி காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வேணு சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஜாமீன் மனு விசாரணையின் போது பொன்.மாணிக்கவேல் அளிக்கும் விளக்கம் அல்லது தகவல் பகீர் ரகத்தில் இருக்கும் என்கின்றனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார். 

click me!