பிடிவாரண்ட்டில் சிக்கிய சசிகலா குடும்பம்...! சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

First Published Jan 19, 2018, 5:29 PM IST
Highlights
ttv dinakaran sister Sridhaladevi was convicted in property case


சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட டி.டி.வி சகோதரி ஸ்ரீதளதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  டி.டி.வி. தினகரன் மைத்துனர் எஸ்.ஆர். பாஸ்கரனுக்கும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சசிகலாவின் அக்காள் வனிதாமணி. இவருக்கு டிடிவி தினகரன்,  சுதாகரன், டிடிவி பாஸ்கரன் என்ற மூன்று மகன்களும்,  சீதளதேவி என்ற மகளும் உள்ளனர்.  

இந்நிலையில் சீதளதேவியின்  கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியில்  நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராகப் பணியாற்றி வந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிபிஐ பாஸ்கரன் மற்றும் சீதளதேவி மீதும் 1997 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் அபராதமும் , பாஸ்கரனின் மனைவி சீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2008 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடையவில்லை. 

இந்நிலையில்  பாஸ்கரனுக்கும் அவரது மனைவியும் டிடிவியின் சகோதரியுமான சீதளதேவிக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!