வைரமுத்துக்கு சாதகமாக வந்த உத்தரவு...! சர்ச்சை பேச்சிக்கு சின்னதா ஒரு முற்றுபுள்ளி வைத்த உயர்நீதிமன்றம்..!

First Published Jan 19, 2018, 2:57 PM IST
Highlights
all the cases against vairamuthu must stop said chennai high court


வைரமுத்து கூறியது தவறில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆழ்வார் திருமகள் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம்,கடந்த7 ஆம் தேதி நடைப்பெற்றது.அதில் ஆண்டாள் குறித்து பேசிய வைரமுத்துவின்  பேச்சி சர்ச்சையாக மாறியது.

இதனை தொடர்ந்து பல இந்து அமைப்புகள் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது

மேலும்,வைரமுத்து மற்றும் தினமணி நாளிதழ் ஆசிரியருக்கு எதிராக சென்னை ராஜபாளையத்தில் 3 பிரிவுகளில் வழக்கு  தொடரப்பட்டது

வைரமுத்துவுக்கு எதிராக சமுதாய நல்லிணக்கப் பேரவையைச் சேர்ந்த முருகானந்தம், என்பவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடார்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் கூறிய கருத்துக்களை தான் வைரமுத்து கூறியதாக அவருடைய வழக்கறிஞர் வாதாடி  உள்ளார்

பின்னர் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற,ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட கருத்தை  தான் வைரமுத்து மேற்கோள் காட்டி பேசி உள்ளார், அவராக தவறாக பேசவில்லை என தெரிவித்து,பிற்பகலுக்கு விசாரணையை ஒத்தி வைத்துனர்.

இதனை  தொடர்ந்து வைரமுத்துவுக்கு  எதிராக  தொடரப்பட்ட பல்வேறு  வழக்குகளுக்கு  தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

மேலும், வைரமுத்து அளித்துள்ள மனுவிற்கு  பதில் அளிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

click me!