ரூ.75,000 லஞ்சம்.. கையும் களவுமாக பிடிபட்ட கமிஷனர்

 
Published : Jan 19, 2018, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ரூ.75,000 லஞ்சம்.. கையும் களவுமாக பிடிபட்ட கமிஷனர்

சுருக்கம்

tanjore corporation commissioner arrested for getting bribe

75000 ரூபாய் லஞ்சம் பெற்ற தஞ்சை மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த சம்பத்தத்திடம், மாநகராட்சி வார்டு வேலைக்கு குறைந்த வரி வசூலிப்பதற்காக ஒரு லட்சம் ரூபாயை தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜன் லஞ்சமாக கேட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் முடியாது. 75 ஆயிரம் ரூபாய் தருவதாக சம்பந்தம் தெரிவித்துள்ளார். அதற்கு வரதராஜனும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சம்பந்தம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரிடம் சம்பந்தம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாநகராட்சி ஆணையர் வரதராஜனை கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு இடைத்தரகராக செயல்பட்டுவந்த நாகராஜன் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

லஞ்சம் வாங்கி மாநகராட்சி ஆணையர் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடத்தில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!