
தினகரன் பேச்சை கேட்காத தங்கத்தமிழ் செல்வன்....!ஆதரவு கூட தர மாட்டாராம்..!
தினகரன் தனி கட்சி தொடங்கினால், புதிய கட்சியில் சேர மாட்டேன் என தங்கதமிழ் செல்வன் தெரிவித்து உள்ளார்.
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிக்கு சென்றதை அடுத்து,தினகரன் தனி கட்சி தொடங்க உள்ளதாகவும்,அது குறித்த அறிவிப்பை ஜனவரி 17 ஆம் தேதியன்று அறிவிக்க இருந்ததாகவும் திட்டம் இருந்தது.ஆனால் தினகரன் ஆதரவாளர்கள் இதற்கு அதிருப்தி தெரிவிக்கவே,புதிய கட்சி என்ற திட்டத்தை தற்போதைக்கு கைவிட்டு உள்ளார் தினகரன்.
இந்நிலையில்,இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தங்க தமிழ் செல்வன்,தினகரன் தனி கட்சி தொடங்கினால்,கட்சியில் சேரமாட்டேன் என்றும்,அதிமுகவின் உறுப்பினராகவே இருப்பேன் என்றும் தங்கதமிழ் செல்வன் தெரிவித்து உள்ளார்.
இதுநாள் வரை தினகரனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்த தங்க தமிழ் செல்வன் தற்போது, தினகரன் கருத்துக்கு மாறாக கருத்து தெரிவித்து இருப்பது ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.