ஓலா, ஊபர் டாக்சி வேலை நிறுத்தத்தால் இதர வாகனங்களின் வாடகை பல மடங்கு உயர்வு..! டிடிவி தினகரன்

Published : Oct 17, 2023, 12:27 PM IST
ஓலா, ஊபர் டாக்சி வேலை நிறுத்தத்தால் இதர வாகனங்களின் வாடகை பல மடங்கு உயர்வு..!  டிடிவி தினகரன்

சுருக்கம்

ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை  நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

டாக்சி ஒட்டுநர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயர்வு, பைக் டாக்சி தடை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஓலா, ஊபர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாகவே வாடகை வாகனத்தை பயன்படுத்தி வருபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர், கால் டாக்சி ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

வேலைநிறுத்ததால் பாதிப்பு

ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும்,  நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அச்செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும் பெரும்பாலானோர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்

எனவே, முதலமைச்சரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்றிருந்த ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை  நடைமுறைப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்களின் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை டிடிவி தினகரன் வலியுறுதியுள்ளார். 

இதையும் படியுங்கள்

13 அம்ச கோரிக்கைகள்... 2வது நாளாகத் தொடரும் ஓலா, உபர் வாடகை கார் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை