ஆவின் பால் பாக்கெட்டுகளில் எடை குறைவு; கவனம் தேவை - டிடிவி தினகரன் அறிவுரை

By Velmurugan s  |  First Published Jan 2, 2024, 5:44 PM IST

சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்.


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக நுகர்வோர் மத்தியில் புகார் எழுந்துள்ளது.  

பேசுவதற்காக மைக்கை பிடித்த ஸ்டாலின்; மோடி மோடி என முழங்கிய பாஜகவினர் - அமைதி காத்த முதல்வர்

Latest Videos

518 முதல் 520 கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் சுமார் 70 கிராம் வரை குறைவான எடையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் ஆவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் என பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  

மதுரையில் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி; போலீஸ் விசாரணை

எனவே,  அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாத வகையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டும் பால் பாக்கெட்டுகளின் எடை சரியான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!