ஆளுநரின் கேள்விகளுக்கு பதில்அளியுங்கள்... டிஎன்பிஎஸ்சி தலைவரை முறைப்படி நியமியுங்கள்- டிடிவி தினகரன்

Published : Aug 22, 2023, 11:47 AM IST
ஆளுநரின் கேள்விகளுக்கு பதில்அளியுங்கள்... டிஎன்பிஎஸ்சி தலைவரை முறைப்படி நியமியுங்கள்- டிடிவி தினகரன்

சுருக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆளுநரின் கேள்விகளுக்கு பதில அளித்து முறைப்படி நியமனம் செய்யுங்கள் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.   

கோப்புகளை திருப்பி அனுப்பிய ஆளுநர்

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லைய என அந்த கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்? உறுப்பினர்கள் தேர்வில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா? போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநரின் கேள்விக்கு பதில் அளியுங்கள்

திமுக ஆட்சியமைந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால் அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வேலைவாய்ப்புக்கான தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், விதிகளை மீறி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக வழங்கி, அவரின் ஒப்புதலை பெற்று காலியாக உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க முடியாது.? கோப்புகளை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது.! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamil News Live today 30 December 2025: ரூ.1,950-க்கு விமான டிக்கெட்.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சலுகை